மாணவர்களே ..! 8 ஆவது பாஸ் ஆக முடியுமா..? விரைவில்....! தமிழக பள்ளிகல்வித்துறை "குண்டு" போடப்போகுதா..!?

First Published Jan 22, 2018, 6:48 PM IST
Highlights
there is compulsary pass for 8th standard tn education system modified


 7-ம் வகுப்பு வரை மட்டுமே இனி கட்டாய தேர்ச்சி...!

வரும் கல்வியாண்டில், குறிப்பிட்ட  வகுப்புகளுக்கு புதிய பாட திட்டம் அமலுக்கு வர உள்ளது என்பது தெரிந்த ஒன்றே...அதே போன்று கட்டாய தேர்ச்சி  என்ற ஒன்று இருப்பது பலரும் அறியாததாய்  உள்ளது....

கட்டாய தேர்ச்சி..!

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 7-ம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்கள் கட்டாய தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.அதாவது 8  ஆம் வகுப்பில்  ஆப்பு  காத்திருக்கிறது என்பது தான் அர்த்தம்.

இலவச மற்றும்  கட்டாய கல்வி சட்டத்தில் கீழ், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தோல்வி அடைய செய்யக்கூடாது என்றும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் அந்தந்த வகுப்புக்குறிய திறன்களை பெறவில்லை என்பது குற்றசாட்டாக எழுந்தது. 

இதனை  தொடர்ந்து,இதனால் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு தேர்வு நடத்த வேண்டும் என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதற்காக இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் வரயிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய அரசின் இந்த முடிவை அமல்படுத்துவது அந்தந்த மாநிலங்களின் விருப்பம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கனவே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக எதனை அமல்படுத்துவது என பள்ளி கல்வித்துறை அமைச்சர்  ஆலோசனை  செய்து வருகிறாராம்.

இதில் 5-ம் வகுப்புக்கு கட்டாய தேர்ச்சி தொடர்ந்து நடைமுறையில் இருக்கட்டும் என்றும், 8-ம் வகுப்புக்கு தேர்வு நடத்தலாம் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே வரும் கல்வி ஆண்டில் இது தொடர்பாக தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு, 8-ம் வகுப்புக்கு தேர்வு என்ற நடைமுறையை அமல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது...

click me!