சைக்கிள் கேப்பில் சேட்டிலைட் விட்ட நித்தி...  ஆசிரமமா? ஆபாச மடமா? பாயும் நடவடிக்கை!

 
Published : Jan 22, 2018, 06:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
சைக்கிள் கேப்பில் சேட்டிலைட் விட்ட நித்தி...  ஆசிரமமா? ஆபாச மடமா? பாயும் நடவடிக்கை!

சுருக்கம்

Complaint against Nithyananda Ashram Girl abusing Vairamuthu

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை குழந்தைகளை வைத்து ஆபாசம் கொப்பளிக்கும் வார்த்தைகளால் விமர்சித்த நித்யானந்தா ஆசிரமம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கர்நாடகா மாநில போலீசாருக்குக் கடிதம் எழுதியுள்ளது நித்த்யானந்த சீடர்களுக்கிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்கலுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவருக்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்க வைரமுத்தும் வருத்தம் தெரிவித்துவிட்டார். இருப்பினும் அவரை கண்டித்து பல இடங்களில் போராட்டமும் அவருக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டு வருகின்றன.

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை விமர்சித்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் சிறுமிகள் பேசும் பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர்கள் தங்களை நித்யானந்தா ஆசிரமத்தில் வசிக்கும் சந்நியாசிகள் என அறிமுகப்படுத்திக் கொள்வதோடு வைரமுத்துவை கடுமையானக் கெட்ட வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர். இந்து மதம் குறித்து கருத்து தெரிவிக்கிறார்களோ அவர்களனைவரையும் தகாத முறையில் பேசி வீடியோ பதிவுசெய்து  வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நித்யானந்தாவின் தீவிர இளம் சிஷ்யை ஒருவர் வைரமுத்துவை அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசி வீடியோ  பதிவிட்டுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவிவருகிறது.  

ஆண்டாள் மீது பக்தியோ மரியாதையோ அவள் கவிதையின் மீது ரசனையோ இல்லாத கூட்டம் ஒரு தீவிர கலக விளைவிற்காக பாசாங்கு பக்தியோடும் பொய்யான தன்மான ஒப்பனையுடனும் கிளம்பியிருக்கிறது. இது பல இளைஞர்களின் ரகசிய குரலாக இருப்பதே இதன் பேராபத்து. அவள் நித்தி சிஷ்யை என்பதை மீறி அடுத்த தலைமுறையின் அரைவேக்காட்டு புரிதல் இதில் எச்சரிக்கை மணி அடிக்கிறது. பார்ப்பதற்கு நவநாகரிக பெண் போலவும் ,சதா பகவானின் பெருமைகளை பேசக்கூடிய ஒரு பார்ப்பன பெண்மணி போலவும் இருந்து கொண்டு இப்படி ஆபாசம் ததும்பப் பேசவைத்துள்ளது பேசவைத்த தனது மடத்துக்கு ஆண்டாளை காரணம் காட்டி அட்வடைஸ்மென்ட் செய்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

இந்நிலையில், சிறுமிகளை பயன்படுத்தி வைரமுத்து மீது மிக ஆபாசமாக  விமர்சனங்களை முன்வைத்து வரும் நித்யானந்தா ஆசிரமம் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கர்நாடகா மாநில போலீசாருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், சந்நியாசிகள் எனக் கூறிக்கொண்டு நித்யானந்தா ஆசிரமத்தில் வசிக்கும் சிறுமிகளின் வீடியோ பேச்சு அடங்கிய பேஸ்புக் பக்கத்தையும் அவர் ஆதாரத்திற்கு இணைத்துள்ளார். தனிநபர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தாக்கி பேசுகின்றனர். மேலும் முஸ்லீலிம் மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராகப் பேசி மக்களிடையே அமைதியைக் குலைக்க நித்யானந்தா ஆசிரமம் முயல்கிறது. எனவே அதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பியூஷ் மானுஷ் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!