
மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?"*
சென்னை, வியாசர்பாடி மேம்பாலத்தில் இருந்து பேசின்பாலம் செல்லும் மார்க்கத்தில் வலதுபுறம் மிகவும் பழமையான கட்டிடம் என உள்ளது
கருவேல மரங்கள் சூழ புதர் மண்டிக் கிடக்கும் அந்தக் கட்டிடம் மிகவும் பாழடைந்து பயன்பாடற்ற நிலையில் இருப்பதோடு அந்த கட்டிடத்தின் பக்கவாட்டு சுவற்றில் ஓவ்வொரு தூணிலும் ஆலமரம் (சுமார் 5மரங்கள்) முளைத்து பெரிய அளவில் வேர் விட்டு வளரத் தொடங்கியுள்ளது.
இந்தக் கட்டிடம் அமைந்திருக்கும் சாலையானது ஆந்திரா மற்றும் சென்னைப் புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்குள் நுழையும் பிரதான சாலையாகும். அதுமட்டுமின்றி அந்தக் கட்டிடம் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதி அமைந்திருப்பதாலும் இவ்வழியே இரு சக்கர, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள், பாதசாரிகள் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
தற்போது மழைக்காலம் என்பதால் மரம் வளர்ந்து, புதர் மண்டிக் கிடக்கும் அந்தக் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்றே தோன்றுகிறது
அதனால் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் மிகப்பெரிய ஆபத்து ஏற்படலாம் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்தக் கட்டிடத்தை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆபத்து வரும் முன் அகற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது