ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயற்சி... கால்தவறி தண்டவாளத்தில் விழுந்த திருடன்... அடுத்து நிகழ்ந்தது என்ன?

Published : Oct 07, 2022, 09:05 PM IST
ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயற்சி... கால்தவறி தண்டவாளத்தில் விழுந்த திருடன்... அடுத்து நிகழ்ந்தது என்ன?

சுருக்கம்

சென்னையில் மின்சார ரயிலில் பயணிகளிடம் செல்போனை பறிக்க முயன்ற திருடன் ஒருவன் தவறி தண்டவாளத்தில் விழுந்ததில் அவரது கால்கள் துண்டாகிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 

சென்னையில் மின்சார ரயிலில் பயணிகளிடம் செல்போனை பறிக்க முயன்ற திருடன் ஒருவன் தவறி தண்டவாளத்தில் விழுந்ததில் அவரது கால்கள் துண்டாகிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ரயில்களில் ஜன்னலோரம் செல்போன்களை கையில் வைத்திருக்கும் பயணிகளிடம் இருந்து செல்போனை பறிக்கும் சம்பவம் அன்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இதுப்போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரயிலில் பயணிகளிடம் செல்போனை பறிக்க முயன்ற திருடன் ஒருவன் தவறி தண்டவாளத்தில் விழுந்ததில் அவரது கால்கள் துண்டாகின.

இதையும் படிங்க: கழிவறையில் வீசப்பட்ட குழந்தை... தனியார் மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்!!

முன்னதாக வண்ணாரப்பேட்டை பென்சில் - கொருக்கு பேட்டை இடையே மின்சார ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மின்சார ரயிலில் தாவி, ஜன்னலோரம் இருந்த பயணியின் செல்போனை பறிக்க முயன்றார். இதை பார்த்த சக பயணிகள் அலறினர். செல்போன் பறிக்கும் முயற்சியில் ரயிலின் ஜன்னலில் தொங்கிய அந்த இளைஞர் பிடி நழுவி ஓடும் ரயிலுக்குள் விழுந்தார்.

இதையும் படிங்க: பல்லடம் பனியன் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை; போலீசார் விசாரணை

இதில் ரயிலின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் அவரது இரு கால்களும் பலத்த காயம் அடைந்த நிலையில், இடது கால் துண்டானது. ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார், கால் துண்டான வாலிபரிடம் விசாரித்தனர். அதில், கொருக்குபேட்டையை சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீது ஏற்கனவே 6 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!