
காஞ்சிபுரம்
தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள், மக்கள் என அனைவரும் மகழ்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரியாக விளங்குவது மதுராந்தகம் ஏரி. இதன் நீர்மட்ட உயரம் 21.5 அடியாகும்.
தற்போது தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் மதுராந்தகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளநீர் வரத் தொடங்கி உள்ளது. நீர்வரத்து கால்வாய்களின் மூலம் வெள்ளநீர் மதுராந்தகம் ஏரிக்கு வந்தடைகிறது.
அதனால் இங்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. தற்போது, நீர்வரத்து உயர்ந்துள்ளதால் நேற்றைய நிலவரப்படி இதன் நீர்மட்டம் 18 அடியாக நிரம்பியுள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஏரியின் நீர்பாசனக் கால்வாய் மூலம் 20 கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்து 413 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..