வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள கூடாது.!எந்த விடுப்புகளையும் எடுக்காமல் பணிக்கு வர வேண்டும்- போக்குவரத்து துறை

By Ajmal KhanFirst Published Jan 5, 2024, 8:04 AM IST
Highlights

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும் எனவே வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த விதமான விடுப்புகளையும் எடுக்காமல் பணியில் ஈடுபட வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்களை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Latest Videos

இதில் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்க்கப்படாத காரணத்தால் பேச்சுவாரத்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து வருகிற  9ஆம் தேதி முதல் காலவரையின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பால் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்க முடியாமல் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவானது.

பேருந்து சேவை முடங்கும் அபாயம்

இதனையடுத்து தமிழக அமைச்சர் சிவசங்கர் தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். கோரிக்கைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இருந்த போதும் வேலை நிறுத்தப்போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து போக்குவரத்து துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும்,

விடுப்பு எடுக்க கூடாது

எனவே வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த விதமான விடுப்புகளையும் தவிர்த்து பணிக்கு ஆஜராகி சீரான பேருந்து இயக்கம் நடைபெற போக்குவரத்துத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

விமான பயணிகளே உஷார்.. இவ்வளவுதான் லிமிட்.. இதற்கு மேல் பணம், தங்க நகைகளை கொண்டு போகாதீங்க..

click me!