காலை உணவு திட்டத்தை வியந்து பார்க்கும் மாநிலங்கள்! அவசர அவசரமாக ஆய்வு செய்த தமிழகம் வந்த தெலுங்கானா அதிகாரிகள்

By Ajmal Khan  |  First Published Aug 31, 2023, 9:22 AM IST

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தை தெலுங்கானாவில் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய தெலுங்கானா மாநில அதிகாரிகள் தமிழகம் வந்து பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வு செய்துனர். 


தமிழக அரசின் காலை உணவு திட்டம்

தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், இடை நிற்றலை குறைக்கும் வகையிலும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக மாணவர்களுக்கு காலை உணவுகள் வழங்கும் வகையில் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்துள்ளார். இதன் காரணமாக ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு மிகுந்த பயன் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள, சென்னை வந்துள்ள தெலங்கானா மாநில முதலமைச்சரின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், அரசு பழங்குடியினர் நலத் துறை, அரசுச் செயலாளர் டாக்டர்.கிறிஸ்டினா சொங்து , கல்வித் துறை அரசுச் செயலாளர் கருணா வக்காட்டி, முதலமைச்சரின் சிறப்புப் பணி அலுவலர் ப்ரியங்கா வர்கீஸ், 

தெலுங்கானா அரசு அதிகாரிகள் ஆய்வு

பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் துறை அரசு சிறப்புச் செயலாளர், பாரதி ஹொல்லிக்கேரி, உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் சென்னை ராயபுரத்தில் உணவு தயாரிக்கும் கூடம் மற்றும் மாநகராட்சி உருது தொடக்க பள்ளியில் திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டனர். அவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் இளம் பகவத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.  உணவு தயாரிக்கும் கூடத்தில் எவ்வாறு உணவு தயாரிக்கப்படுகிறது, உணவு பொருட்கள் கொள்முதல் செய்யும் முறை பள்ளிகளுக்கு எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது, என்பதை கேட்டு தெரிந்து கொண்டதோடு, உணவை ருசி பார்த்தனர். 

வரவேற்பு கிடைத்த காலை உணவு திட்டம்

அதை தொடர்ந்து ராயபுரம் ஆரத்தூண் சாலையில் உள்ள மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்ட தெலங்கானா அதிகாரிகள் பள்ளி ஆசிரியர்களிடத்தில் நாளொன்றுக்கு எத்தனை மாணவர்கள் பயன்பெறுகிறார்கள், பெற்றோர்களின் கருத்துகள் குறித்து கேட்டறிந்தனர்.  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காலை உணவு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் இளம் பகவத், காலை உணவு திட்டம் அனைத்து தரப்பிலும் வரவேற்பு பெற்றுள்ளதாக கூறினார்.  தெலூங்கானா மாநில அலுவலர்களை போல மற்ற மாநில அலுவலர்கள் விரும்பினாலும் அவர்களும் பார்வையிடலாம் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஆரம்பிக்கலாமா...! தெற்க்கிலிருந்து வரும் குரல்- பாஜகவை அலற விட தயாராகும் ஸ்டாலின்

click me!