ஸ்முல் அப்-ல் விடிய விடிய பாடல்... பள்ளிக்கு செல்லாத ஆசிரியை!

By manimegalai aFirst Published Oct 28, 2018, 4:27 PM IST
Highlights

பள்ளி ஆசிரியை ஒருவர், பாடல் பாடுவதில் உள்ள ஆர்வத்தால் விடிய விடிய ஸ்முல் அப்-ல் பாடி விட்டு பள்ளிக்கு சரியாக செல்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

பள்ளி ஆசிரியை ஒருவர், பாடல் பாடுவதில் உள்ள ஆர்வத்தால் விடிய விடிய ஸ்முல் அப்-ல் பாடி விட்டு பள்ளிக்கு சரியாக செல்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக முத்துலட்சுமி பணியாற்றி வருகிறார். இவருக்கு பாடல் மீதான ஆர்வத்தால், தினமும் இரவில் ஸ்முல் அப்-ல் பாடல்களைப் பாடி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

முத்துலட்சுமியின் பாடகி ஆர்வம் எல்லை மீறி, விடிய விடிய பாடும் அளவுக்கு தலைக்கேறி விட்டதாக உடன் பணிபுரிபவர்கள் கூறுகின்றனர். பாடல் மீதான ஆர்வத்தால் இரவு முழுவதும் ஸ்முல் அப்-ல் பாடி வந்துள்ளார். இதனால், காலை நேரத்தில் முத்துலட்சுமி அயர்ந்து தூங்கிவிடுவாராம். இதன் காரணமாக முத்துலட்சுமி பள்ளிக்கு லேட்டாக செல்வதாகவும், சில நேரங்களில் பள்ளிக்கே வருவதில்லை என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், 3 நாட்கள் மட்டுமே முத்துலட்சுமி பள்ளிக்கு செல்வதாகவும் மற்ற நாட்களில் வீட்டிலேயே இருந்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

அப்படி லேட்டாக பள்ளிக்கு சென்றாலும் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதில்லை என்றும் உடன் பணபுரியும் ஆசிரியர்கள் கூறுகின்றனர். பாடல்கள் பாடுவதில் ஆர்வமுள்ள இவர், பாட்டுக்கு ஏற்றபடி தனது கெட்டப்பை மாற்றிக் கொள்வாராம். ஸ்முல் அப்பிற்கு அடிமையான இவர், பள்ளிக்கு முறையாக வராததை அடுத்து, இவர் மீது மாவட்ட கல்வித்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித் துறை இவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கும்? தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆசிரியை (பாடகி) முத்துலட்சுமி என்ன பதிலளிப்பார்? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

click me!