காவல் ஆய்வாளர் ஒருவர் தகாத வார்த்தையில் திட்டியதால் மனமுடைந்த காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் ஆய்வாளர் ஒருவர் தகாத வார்த்தையில் திட்டியதால் மனமுடைந்த காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் சுபக்குமார். இவர் நேற்று காலை நடைபெற்ற ரோல்காலின் போது சக ஊழியரான எழுத்தர் சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசனை, தகாத வார்தைகளால் அனைவர் முன் திட்டியதாக கூறப்படுகிறது. காவல் ஆய்வாளர் சுபகுமார் திட்டியதால், மனமுடைந்த எழுத்தர் முருகேசன், காவல் நிலையத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
undefined
இதனைப் பார்த்த மற்ற காவலர்கள், முருகேசனை மீட்டனர். இதன் பின்னர் முருகேசனை அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். காவல் ஆய்வாளர் சுபக்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், சக காவலர்கள் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.
தற்கொலைக்கு முயன்ற எழுத்தர் முருகேசன் தற்போது நலமுடன் இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயரதிகாரிகள் தங்களுக்குகீழ் வேலை செய்பவர்களுக்கு மனஉளைச்சல் தரும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்று காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.