அரசு பேருந்து சரியில்லை என வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட பழனியை சேர்ந்த ஓட்டுனர் விஜயகுமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அரசு பேருந்து சரியில்லை என வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட பழனியை சேர்ந்த ஓட்டுனர் விஜயகுமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் தினமும் 20,000-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 70 சதவீதம் பஸ்கள் காலாவதியானவை. அரசு பஸ் என்றாலே ஓட்டை, உடைசலுடன் காணப்படும் என்று மக்கள் மனதில் கருத்து நிலவி வருகிறது.
மழை காலங்களில் அரசு பஸ்களில் செல்ல வேண்டும் என்றால் நிச்சயம் கையில் குடை எடுத்து செல்ல வேண்டும் என்ற அளவுக்கு அரசு பஸ்கள் மோசமாக காட்சி அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் அரசு பஸ்களில் பயணிக்கும் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பல பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்துள்ளன. அதன் வழியாக மழை நீர் வருவதால் இருக்கைகளில் அமர முடியாமல் அனைவரும் நின்று கொண்டே பயணிக்கின்றனர்.
undefined
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஓடும் அரசு பேருந்துகள், தரமற்ற முறையில் இருப்பதாக வேதனை தெரிவித்த ஓட்டுனர் விஜயகுமார் வீடியோ, ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதில் அரசு பேருந்துகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், பெரும்பாலான பேருந்துகளில் ஷட்டர், பிரேக், என எதுவுமே இல்லாமல் ஓட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார்.
மழையின் போது, ஓழுகும் மழைநீரில் 4 மணி நேரம் இயக்கி வந்ததாகவும், பணிமனை அதிகாரிகள் பேருந்துகளின் நிலை குறித்து, கவலைப்படுவது இல்லை, எனவும் கூறினார். இந்நிலையில் அரசு பேருந்து சரியில்லை என சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஓட்டுநர் விஜயகுமாரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளனர்.