உஷார்..! பிரபல "அணில் சேமியாவில்" வெள்ளை புழுகு..! பாக்கெட் திறந்தாலே நெளியும் கொடுமை..!

By thenmozhi g  |  First Published Sep 1, 2018, 5:58 PM IST

திண்டுக்கலில் தயாராகி நாடு முழுவதும் விற்பனையாகி வரும் அணில் சேமியாவில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சி கிளப்பி உள்ளது. 


திண்டுக்கலில் தயாராகி நாடு முழுவதும் விற்பனையாகி வரும் அணில் சேமியாவில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சி கிளப்பி உள்ளது. 

திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்த ஜியாஉசேன் என்பவர் திண்டுக்கலில் உள்ள ஒரு கடையில் அணில் அப்பளம் வாங்கி உள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வந்து பிரித்து பார்த்த போது அதில் வெள்ளை நிற புழுகு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த, ஜியா உதென் அவருடைய நண்பருக்கு கால் செய்து, அவரையும் அந்த கடையில் அணில் சேமியா வாங்க செய்து உள்ளார்.அதனை பிரித்து பார்க்கும் போது அதிலும் புழுகு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடந்து இது குறித்து உணவு துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது

பின்னர் விரைந்து வந்த உணவு துறை அதிகாரிகள் அந்த கடையில் இருந்த அனைத்து சேமியாவையும் பிரித்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவை அனைத்திலும் புழுகு இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட்டது. 

பின்னர் அணில் சேமியா நிறுவனத்திற்கு சென்ற, அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டனர். நேரில் சோதனை செய்த போது தான் தெரிய வந்தது.. அங்கு பணி புரியும் பெண்கள், தங்களது கால்களால், அணில் சேமியாவை மிதித்து அதனை ஒரு கவரில் வாரி வைக்கின்றனர்.

வேலை நேரத்தின் போது, சேமியாவில் தலைமுடி விழுந்து விடக்கூடாது என்பதற்காக, தன் தலையில் கவர் சுற்றி இருக்கும் ஊழியர்கள், சேமியா காலில் மிதிபடுவதை தடுக்க அதற்கான் உபகரணங்களை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்று கண்டெடுக்கப்பட்ட அனைத்து அணில் சேமியா அப்பளங்களின்   காலாவதி நேரம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர். தற்போது அந்த சேமியா பாக்கெட்டில் உள்ள அப்பளங்களை, பரிசோதனைக்காக உணவு துறை  அதிகாரிகள் எடுத்து சென்று உள்ளனர். தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனில் சேமியாவை விரும்பி சாப்பிடும் போது, அதில் புழுகு இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. 

click me!