துணை நடிகையின் கள்ளக்காதலனை கொடைக்கானலில் வைத்து, கூலிப்படையை ஏவி கொலை செய்த தந்தை தலைமறைவானார். இதில் கைதானவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உகார்தே நகரில் நின்ருக் கிடந்தக் காரை போலீசார் மீட்டனர். காரில் ரத்தமும், தூவப்பட்டிருந்த மிளகாய் பொடியும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. போலீசார் விசாரணையில், இந்த கார் கொடைக்கானலை சேர்ந்த பிரபாகரனுக்கு சொந்தமானது என தெரிந்தது. இவரே கார் டிரைவராகவும் இருந்துள்ளார்.
ஆகஸ்ட் 24ம் தேதி இரவு வாடகைக்கு செல்வதாக கூறி சென்ற பிரபாகரன் வீடு திரும்பவில்லை. சிட்டி டவர் என்ற வனப்பகுதியில் 50 அடி பள்ளத்தில் பிரபாகரனின் உடல், கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், கடைசியாக பிரபாகரன் செல்போனுக்கு பேசியது அவரது நண்பரான மற்றொரு கார் டிரைவர் செந்தில்குமார் என்பது தெரிந்தது. இதனால் அவரைப் பிடித்து போலீசார் விசாரித்ததில், பணத்துக்காக பிரபாகரனை கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளார் செந்தில்குமார்.
undefined
போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த செந்தில்குமார்; சென்னை, திருவான்மியூர் வால்மீகி நகரை சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன். அவரது மனைவி, துணை நடிகை விஷ்ணுபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஷ்ணுபிரியாவின் தந்தை தொழிலதிபர் சூரியநாராயணன் ஐதராபாத்தில் உள்ளார். இவருக்கு கொடைக்கானலில் வீடு, நிலம் இருக்கிறது. மனநிலை பாதிப்பில் இருக்கும் ரமேஷ்கிருஷ்ணனை கொடைக்கானலில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைத்து, சிகிச்சை அளிக்கின்றனர். அவரை பார்க்க விஷ்ணுபிரியா அடிக்கடி கொடைக்கானல் வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்து செல்லும் விஷ்ணுபிரியாவை கொடைக்கானலுக்கு அழைத்து வரவும், மீண்டும் விமானநிலையம் அழைத்துச் செல்லவும் பிரபாகரன் தனது காரை எடுத்துச் செல்வார். இதில் இருவருக்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஹோட்டலில் ரூம் எடுத்து உல்லாசமாக இருக்கும் அளவிற்கு கள்ளக் காதலாக மாறியுள்ளது. அதுமட்டுமல்ல பிரபாகரனுக்கு சொந்தமாக கார் வாங்கிக் கொடுத்துள்ளார். 15 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பாக விஷ்ணுபிரியா கொடைக்கானல் வந்தபோது, ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தவர், அருகில் பிரபாகரனை வைத்துக் கொண்டு, தனது தந்தை சூரியநாராயணனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, பிரபாகரனை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூரியநாராயணன், பிரபாகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து என்னிடம் அவர் பேசினார். எனவே பிரபாகரனை கொலை செய்ய ₹3 லட்சம், 13 சென்ட் நிலம் தருவதாக பேரம் பேசினார். இதன்பேரில் நான், மணிகண்டன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பிரபாகரனை கொலை செய்ய திட்டமிட்டோம். ஆகஸ்ட் 24ம் தேதி இரவில் நான் போனில் தெரிவித்தபடி, பிரபாகரன் குறிஞ்சி ஆண்டவர் கோயிலருகே வந்தார். அவரை அழைத்து சென்று மதுகுடிக்க வைத்து, குடிபோதையில் இருந்த அவரை காருக்குள் வைத்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொன்றோம். உடலை வனப்பகுதியிலுள்ள பள்ளத்தில் வீசினோம். காரை உகார்தே நகரில் நிறுத்திவிட்டுச் சென்றோம் என அவர் கூறியுள்ளார்.
தற்போது தலைமறைவாக உள்ள தந்தை சூரிய நாராயணனை தேடி தனிப்படை போலீசார் ஐதராபாத் விரைந்துள்ளனர். கள்ளக்காதலனை, நடிகையின் தந்தையே கூலிப்படை ஏவி கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.