இனிப்போடு கலந்து பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலங்கள் விநியோகமா..? தமிழக காவல்துறை வெளியிட்ட முக்கிய தகவல்

Published : Mar 03, 2024, 12:28 PM IST
இனிப்போடு கலந்து பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலங்கள் விநியோகமா..? தமிழக காவல்துறை வெளியிட்ட முக்கிய தகவல்

சுருக்கம்

இனிப்போடு கலந்து பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலங்கள் விநியோகப்பட இருந்ததாக தவறான செய்தி பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள தமிழக காவல்துறை தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.   

மாணவர்களுக்கு கஞ்சா விநியோகமா.?

தமிழகத்தல் கடந்த சில மாதங்களாக போதைப்பொருட்களில் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் காவல்துறை சார்பாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சி பகுதியில் மாணவர்களுக்கு இனிப்போடு கலந்து கஞ்சா பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக காவல்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

மாணவர்கள் கைதா.?

அதில்,  கடந்த 29.02.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்டம், எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் இரண்டு குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 6 பாக்கெட் (சுமார் 150 கிராம் கஞ்சா மதிப்பு 1500/- ரூபாய் ) கைப்பற்றப்பட்டு எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அல்ல.  இதுதொடர்பான செய்தியை திரித்து உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்கள் நான்கு பேரை காவல்துறையினர் துரத்தி பிடித்து அவர்களிடமிருந்து 2,00,000/- ரூபாய் மதிப்புடைய 500 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களுடன் சிக்கியதாகவும்

உண்மை செய்தி என்ன.?

அதை இனிப்போடு கலந்து சக மாணவர்களுக்கு கொடுக்க திட்டமிட்டதாகவும் சமூக வலைதளம் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் மிகைப்படுத்தப்பட்டு பொய்ச்செய்தி பரவி வருகிறது. இது சம்மந்தமாக தனியார் டிவி செய்தி தொலைக்காட்சி மற்றும் பல்வேறு சமூக ஊடகங்களில் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகின்றனர் இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

கணவரை கழற்றிவிட்டு கள்ளக்காதலனுடன் பிரியா எஸ்கேப்.. உல்லாசத்துக்காக பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்!

PREV
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!