
மணல் குவாரிகளை மூடக்கோரிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
ஆற்றில் இருந்து எடுத்து விற்கப்படும் மணல் விற்பனையில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்ததால் தற்போது அரசே மணல் குவாரிகளை அமைத்து மணல் விற்பனையை செய்து வருகிறது. சமீபத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து மணல் பெறும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மணல் குவாரி விவகாரத்தில் தமிழக அரசை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
6 மாதங்களுக்குள் மணல் குவாரிகள் மூடப்பட வேண்டுமென்று கடந்த வாரம் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. வெளி நாட்டில் இருந்து மணல் இற்க்குமதி செய்யவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கிராணைட் குவாரிகளையும் மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மணல் குவாரிகளை மூடக்கோரிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியகுமாரி மாவட்ட ஆட்சியர்கள் அரசு சார்பில் மேல்முறையீடு செய்துள்ளனர்.