நல்லா புரிஞ்சிக்கோங்க....புதிய புயல் எங்கே...எப்போது வரும்னு..! விவரம் உள்ளே...

 
Published : Dec 04, 2017, 07:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
நல்லா புரிஞ்சிக்கோங்க....புதிய புயல் எங்கே...எப்போது வரும்னு..! விவரம் உள்ளே...

சுருக்கம்

new cyclone formed near andaman

அந்தமான்  அருகே உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை  இன்று டிசம்பர் நான்காம் தேதியும் அதே இடத்தில் நிலை கொண்டு உள்ளது.நாளை காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக  மாற  வாய்ப்பு உள்ளது என  தெரிவிக்கப்பட்டு உள்ளது   

இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்  என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.மேலும் வடமேற்கு திசை,தெற்கு ஆந்திரா, வட தமிழகம்  உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய  வாய்ப்பு உள்ளது

டிசம்பர் 5 ஆம்  தேதிவரை

டிசம்பர் 5 வரை தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யும் என்றும்,சென்னையை பொறுத்தவரை லேசான மழை பெய்ய  வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப் பட்டு உள்ளது

ரெயின் ஸ்னோ...

டிசம்பர் 5 பின்பு

டிசம்பர் 5 ஆம் தேதிக்கு பின் தான், காற்றழுத்த  தாழ்வு  மண்டலம் எங்கு  கரையை கடக்கும்  என கூற முடியும்  என  வானிலை  ஆய்வு  மையம்  தெரிவித்து உள்ளது.

புயல் காற்று மையம்  கொண்டுள்ள இடம் 

அந்தமான்  அருகே நிலைகொண்டுள்ள  காற்றழுத்த  தாழ்வு  நிலை  எதை  நோக்கி நகர்கிறதோ அப்போது தான், தமிழகத்தில்  மழைக்கு வாய்ப்பு எப்படி  இருக்கும் என  கணிக்க முடியும் என  சென்னை  வானிலை  ஆய்வு  மைய  இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் 

PREV
click me!

Recommended Stories

ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி