பிரபல நடிகர் மறைவு..திரையுலகினர் அதிர்ச்சி..!

First Published Dec 4, 2017, 6:33 PM IST
Highlights
Veteran actor and yesteryear heartthrob Shashi Kapoor has passed away in Mumbai


பிரபல ஹிந்தி நடிகர் சசிகபூர் மும்பையில் காலமானார். இதனை  தொடர்ந்து பாலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது

79 வயதான நடிகர் சசிகபூர்  உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று மாலை காலமானார்.

1940 ஆம் ஆண்டுகளிலே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர்  சசிகபூர்.இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நாள் முதலே பல  படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்

தாதா சாகேப் பால்கே என்ற விருதை கடந்த  2015 ஆம் ஆண்டு பெற்றார்.பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர் நடிகர் சசிகபூர்

சங்ராம் (1950) தனாபாணி(1953) உள்ளிட்ட படங்களில்  சசிராஜ் என்ற பெயரில் நடித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது .

இவருடைய இறப்பு செய்தியை அறிந்த திரையுலக நட்சத்திரங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

click me!