
வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவாஜி மணிமண்டபம் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்காக அடையார் சத்யா ஸ்டூடியோ எதிரே ஒதுக்கி கொடுத்தது தமிழக அரசு.
ஆனால் நடிகர் சங்கம் காலம் தாழ்த்தவே தமிழக அரசே முன்வந்து சென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.
இதனிடையே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிவாஜி சிலையை மெரினா கடற்கரையில் இருந்து அகற்றி சிவாஜி மணிமண்டத்தில் அமைத்தது.
அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் நீண்ட நாட்களாக திறப்பு விழா குறித்து தமிழக அரசு வாய்திறக்காமல் இருந்தது.
இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அக்டோபர் 1 ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் அக்டோபர் 1 ஆம் தேதி காலை 1௦.3௦ மணிக்கு அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கடம்பூர் ராஜூ மணிமண்டபத்தை திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.