
ஆன்லைனில் ஆர்டர் செய்தால் பெட்ரோல் டீசல் அனைத்தும் வீடு தேடி வரும் என பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்
டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் நோக்கம்.அதனால் பயன்பெறுவது நம் மக்கள் தான். இனி அடுத்த தலைமுறை வருவதற்குள், எப்படியெல்லாம் இந்தியா முனேற்றம் அடைந்திருக்கும் என்ற ஆவல் இப்பொழுதே அனைவருக்கும் வர தொடங்கிவிட்டது
அதாவது, டிஜிட்டல் பரிவர்தனை முதல் ஆன்லைன் டிக்கெட் வரை அனைத்தும் ஒரு நொடி பொழுதில் இருந்த இடத்திலிருந்தே செய்து முடிக்கிறோம்.
இதனுடைய அடுத்த கட்ட வளர்ச்சியாக, தற்போது ஆன்லைனில் புக் செய்தாலே பெட்ரோல் டீசல் அனைத்தும் நம் வீட்டிற்கே வந்து கொடுக்கும் புதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்
இதிலிருந்து டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நாம் பயணித்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது