அனைத்து பள்ளிகளிலும் நாளை காலை இதை கட்டாயம் பண்ண வேண்டும்..! பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு

By Ajmal KhanFirst Published Aug 10, 2022, 1:24 PM IST
Highlights

மாணவர்களிடம் போதைப்பொருள் வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை போதை விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும்,  நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து வகை பள்ளிகளிலும் போதை விழிப்புணர்வு உறுதிமொழியை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை

தமிழகத்தில் தினந்தோறும் பல்வேறு இடங்களில் போதைப்பொருட்கள் பறிமுதல் என்ற செய்தி வெளியாகி வருகிறது. இந்தநிலையில், போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க  தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே தமிழக அரசின்  செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்காக தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார். குறிப்பாக போதைப் பொருட்களின் பயன்பாட்டை வேரோடும் வேரடி மண்ணோடும் களையெடுக்கத் தமிழ்நாடு அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சியர்களும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களும் பங்குபெறும் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் நாளன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. 

TN TET Exam 2022 : ஆசிரியர் தகுதி தேர்வு தேதி ‘திடீர்’ மாற்றம் - தேர்வு எப்போது தெரியுமா?

ஆர்.எஸ்.எஸ்.காரராகவும், முழு நேர அரசியல்வாதியாகவும் தமிழக ஆளுநர்...! ஆர்.என்.ரவிக்கு எதிராக சீறிய திருமாவளவன்

பள்ளிகளில் உறுதி மொழி 

மேலும் ஆண்டும் ஆகஸ்ட் 11-ஆம் நாளை போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும்,  அன்றைய நாள், பள்ளி கல்லூரிகளில் இதுதொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து மாவட்ட பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு போதை விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தோடர்ந்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போதை விழிப்புணர்வு குறும்படத்தை மாணவர்களுக்கு காட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உறுதிமொழி எடுத்த விவரத்தினை இமெயில் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்

இந்திய செஸ் அணிக்கு 2 கோடி பரிசு... வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

click me!