அரசு ஊழியர்களுக்கு அதிரடியாக சம்பள உயர்வு... - தீபாவளி போனஸாக இன்ப அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி...!

First Published Oct 11, 2017, 3:05 PM IST
Highlights
The Tamil Nadu Cabinet has approved a decision to increase the wages of Tamil Nadu government employees by 20 .


தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை சுமார் 20% உயர்த்த தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 7வது ஊதியக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பகுதியினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வழக்கு தொடருவும் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இதைதொடர்ந்து, 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த அறிக்கையை  நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை சுமார் 20% உயர்த்த தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 7வது ஊதியக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

click me!