இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 23.33 லட்சம் மாணவர்கள் எழுதினர். 14 மாநகரங்களில் 571 மையங்களில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் இளநிலை நீட் தேர்வில் நடந்துள்ளதாகக் கூறி 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனிடையே இன்றைய விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில், இளநிலை நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ.யின் விசாரணை அறிக்கை மனுதாரர்களுக்கு வழங்கப்படவில்லை என முறையிடப்பட்டது.
undefined
கருவாடு மீன் ஆகாது; அதிமுகவில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது - உதயகுமார் சாடல்
இதற்கு பதில் அளித்த நீதிபதி, இந்த விவகாரம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிபிஐ.ன் அறிக்கை பகிரப்பட்டால் குற்றம் இழைத்தவர்கள் உஷாராகி விடுவார்கள். நீட் வினாத்தாள் கசிவு திட்டமிட்டு நடந்துள்ளது. ஆனால், அது முழு தேர்வையும் பாதிக்காது என்று கூறும் மனுதாரர்கள் கடைசி வரை அந்த நம்பிக்கையை கைவிடவேண்டாம் என தெரிவித்தார்.
மேலும் நீட் வினாத்தாள் கசிவு திட்டமிட்டு நடந்துள்ளது என்றும், அதற்கு முழு தேர்வையும் பாதித்தது என்றும் கூறும் மனுதாரர்கள் அதனை நம்ப வைக்க முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, ஆழமான விசாரணை தேவைப்படும் பிரச்சினைகளில் எவை என்பதையும் சுட்டிக்காட்டுங்கள் என்று வலியுறுத்தினார்.
3வதும் பெண் குழந்தையா? பச்சிளம் குழந்தைக்கு தந்தையே எமனாக மாறிய சோகம்
நீட் தேர்வு எழுதியவர்களில் 1.08 லட்சம் மாணவர்களுக்கு இடங்கள் கிடைக்கும். மீதமுள்ள 22 லட்சம் மாணவர்களுக்கு சீட் கிடைக்காது. எனவே மறு தேர்வுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது. அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, முழு தேர்வும் அதன் புனிதத்தை இழந்துவிட்டது என்றால் மட்டுமே மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியும் என்றார்.