
கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று தங்கச்சிமடம் போராட்டக் குழு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்...
இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளை எட்டியுள்ளது....
இதற்கிடையே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோட்டாட்சியர் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்த மக்கள், வெளியுறவுத் துறை செயலர் பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக தெரிவித்துள்ளனர்.