நெடுவாசல் போராட்டம் தற்காலிக வாபஸ்.... ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுவதாக மத்திய மாநில அரசுகள் உறுதி....

First Published Mar 9, 2017, 8:57 PM IST
Highlights
Federal and state governments to refrain from plans to fight netuvacal temporary withdrawal .... sure


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய மாநில அரசுகள் உறுதியளித்ததையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக போராட்ட குழுவினர் அறிவித்துள்ளர்.

தமிழகத்தில் நெடுவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து பொதுமக்கள் கடந்த 22 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்த பின் போராட்ட குழுவினரை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர், மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு இங்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது எனவும் எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் அதை போராட்ட குழுவினர் ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து இன்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நெடுவாசளுக்கு வந்து நேரடியாக போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் பேசுகையில், நெடுவாசல் வந்த பிறகு தான் இங்கு உள்ள செழுமை தெரிய வந்தது எனவும் மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது எனவும் தெரிவித்தார்.

அவரைதொடர்ந்து அமைச்ஹ்க்கர் விஜயபாஸ்கரும் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்திக்கும்போது, திட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளதாகவும், சுற்றுசூழல் பாதிக்கும் வகையில் எந்த திட்டமும் அனுமதிக்கபடாது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர்களின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.

அமைச்சர்கள் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படும் எனவும், கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் 100 மடங்கு போராட்டம் மீண்டும் தொடரும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மேலும் உறுதி அளித்த அமைச்சர்களுக்கு நன்றி எனவும், போராட்டகளத்துக்கு உள்ளே பள்ளிகூடங்கள் இருப்பதால் இப்போதைக்கு போராட்டம் ஒத்திவைக்கபடுவதாக அறிவித்தனர்.  

click me!