Bus Strike : புஸ்வாணம் ஆன வேலை நிறுத்தம்.. தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்கி கெத்து காட்டும் தமிழக அரசு

By Ajmal KhanFirst Published Jan 9, 2024, 12:49 PM IST
Highlights

பயணிகள் எந்தவித அச்சமின்றி, பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போக்குவரத்து கழகம்,   மொத்தமாக 16,144 பேருந்துகளில் 15,528  பேருந்துகளானது இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. 
 

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் அறிவித்தன்.

Latest Videos

இதன் காரணமாக பேருந்து சேவை பாதிக்கப்படும் என தகவல் வெளியானது. தமிழக அரசு சார்பாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சு வார்த்தையில் உடன் பாடு ஏற்படாத்தையடுத்து  இரவு 12 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பேருந்து இயக்கப்படும் என உறுதி அளித்தது.

வழக்கம் போல் இயக்கும் பேருந்துகள்

அதன்படி வேலை நிறுத்தம் தொடங்கிய நிலையிலும், தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தம் தோல்வி அடைந்துள்ளது. தற்போது வரை தமிழகம் முழுவதும் இயக்க்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. அதன் படி,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது.

 இயங்கிய பேருந்து சேவைகள்

மாநகர போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் உள்ள 3233 பேருந்துகளில் தற்போது வரை 3129 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மொத்தமுள்ள 110 பேருந்துகளில் 110  பேருந்துகளும் இயக்கப்படுகிறது. விழுப்புரம் கோட்டத்தில் 2454 பேருந்துகளில் 2219 பேருந்துகள் இயக்கப்படுகிறது. சேலத்தில் 1249 பேருந்துகளில் 1217 பேருந்துகள் இயக்கப்படுகிறது.  கோயம்புத்தூரில் 2175 பேருந்துகளில் 2056 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் 3142 பேருந்துகளில் 2861 பேருந்துகள் இயக்கப்படுகிறது.  மதுரை கோட்டத்தில் 2166 பேருந்துகளில் 2127 பேருந்துகள் இயக்கப்படுகிறது.  திருநெல்வேலி கோட்டத்தில் 1636 பேருந்துகளில் 1624 பேருந்துகள் இயக்கப்படுகிறது.  மொத்தமாக 16,144 பேருந்துகளில் 15,528  பேருந்துகளானது இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை சார்பாக நடப்பட்டுள்ள அருகில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்போடு பயணம்

எனவே, பயணிகள் எந்தவித அச்சமின்றி, பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது, மேலும், அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள். உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் முழுமையாக கண்காணித்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்வதாக போக்குவரத்து கழகம் கூறியுள்ளது. 

இதையும் படியுங்கள்

பிரச்சனைக்கு காரணமே அதிமுக தான்.. அவங்களோடு சேர்ந்து போராட்டம் நடத்துவது நியாயமா? அமைச்சர் சிவசங்கர்..!

click me!