போராட்டம் தொடரும்...! நடவடிக்கையை சந்திக்க தயார்..! தொழிலாளர்கள் சங்கங்கள் அதிரடி...

 
Published : Jan 05, 2018, 07:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
போராட்டம் தொடரும்...! நடவடிக்கையை சந்திக்க தயார்..! தொழிலாளர்கள் சங்கங்கள் அதிரடி...

சுருக்கம்

The strike by the transport workers will continue

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் எனவும் உயர்நீதிமன்ற உத்தரவு ஒருதலைபட்சமானது எனவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று மாலை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதைதொடர்ந்து போக்குவரத்து போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்களுக்கு நோட்டிஸ் அனுப்பி போக்குவரட்த்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. 

மேலும் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு என கருதப்படும் எனவும் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தது. 

அதன்படி, உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் எனவும் உயர்நீதிமன்ற உத்தரவு ஒருதலைபட்சமானது எனவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

உயர்நீதிமன்ற உத்தரவை சட்டப்படி எதிர்கொள்வோம் எனவும் எழுத்துபூர்வமாக எந்த உத்தரவும் வரவில்லை எனவும் குறிப்பிட்டனர். 

PREV
click me!

Recommended Stories

எங்களுக்கு 6 சீட்டா? அப்படி சொன்ன கட்சிக்கு அழிவுக்காலம் ஆரம்பிச்சுருச்சு.. பிரேமலதா ஆவேசம்!
சைக்கிள், பைக்கில் இடியாப்பம் விற்கிறீங்களா? உணவுப் பாதுகாப்புத் துறை போட்ட அதிரடி உத்தரவு!