கடலில் மிதந்து வந்த புத்தர் சாயலில் சிலை...! மீனவர்கள் ஆச்சரியம்!

 
Published : Dec 14, 2017, 05:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
கடலில் மிதந்து வந்த புத்தர் சாயலில் சிலை...! மீனவர்கள் ஆச்சரியம்!

சுருக்கம்

The statue floating in the sea. Fishermen are surprised

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, புத்தர் சாயலில் கடலில் மிதந்து வந்த சிலை ஒன்றை மீனவர்கள் மீட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம், கிள்ளை அருகே எம்.ஜி.ஆர். திட்டு கடலில் மீனவர்கள் மீன பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அழகிய தெப்பம் ஒன்று மிதந்து வந்தது. மூங்கில் வேலைப்பாடுகளுடன் கூடிய அந்த தெப்பத்தை பார்த்த மீனவர்கள் ஆச்சரியமடைந்தனர். 

10 அடி அகலமும், 10 அடி நீளமும் கொண்ட அந்த தெப்பத்தில் ஒன்றரை அடி உயரத்தில் வெண்கல சிலை ஒன்று இருந்தது. அந்த சிலை புத்தரின் சாயலில் ஒத்திருந்தது. சிலையின் முன்பு, வர்ணம் தீட்டப்பட்ட பூஜை தட்டு உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. 

மேலும், தெப்பத்தை சுற்றி பல வண்ணங்களில் கொடிகள் பறந்து கொண்டிருந்தது. சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் தெப்பத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

கடலில் தெப்பம் ஒன்று மிதந்து வந்தது பற்றி, அப்பகுதி மக்கள் போலீசாருக்கும் சிதம்பரம் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், தெப்பத்தை மீட்டனர். பின்னர், தெப்பம் குறித்து ஆய்வு செய்ய, சிலையை
அவர்கள் கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து ஆய்வு செய்ய அவர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

கண்டெடுக்கப்பட்ட சிலை எங்கிருந்து வந்தது என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!