
தமிழக மீனவர்கள் உட்பட மொத்தம் 619 மீனவர்களை காணவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இறுதி எண்ணிக்கையை தமிழக அரசு தரவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
ஓகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரும் கேரளாவைச் சேர்ந்த 186 மீனவர்களையும் காணவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவை சேர்த்து 619 காணவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஓகி புயலின் பாதிப்புகளை ஆய்வு செய்யக் குழு அமைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் ஓகி புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 63 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆனால் காணாமல்போனவர்களில் இறுதி எண்ணிக்கையை தமிழக அரசு தரவில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
வீடு வீடாகச் சென்று மீனவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் சேகரிக்கும் பணி முடிவடைந்தவுடன் இறுதி எண்ணிக்கை தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளது.