
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் தமிழக வீரர்களின் தியாகம் வீண் போகாது என மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஒ.பி.எஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா என்ற பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் முகாமிட்டு தங்கிருந்தனர். அப்போது அங்கு வந்த 300 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் முகாமை சுற்றி வளைத்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் 74வது படைப்பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலர் உயிருக்கு போராடி வந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.
சுக்மாவில் மாவோயிடுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 25 வீரர்களில் 4 பேர் தமிழர்கள் ஆவர்.
தமிழக வீரர்கள் செந்தில் குமார், அழகுபாண்டி, திருமுருகன், பத்மநாபன் ஆகியோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த வீரர்களின் உடல் அவரவரின் சொந்த ஊருக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கபட்டது.
இந்நிலையில், உயிரிழந்த வீரர்கள் செந்தில் குமார், அழகுபாண்டி, திருமுருகன், பத்மநாபன் ஆகியோரின் குடும்பங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் தமிழக வீரர்களின் தியாகம் வீண் போகாது என தெரிவித்துள்ளார்.