வீரர் அழகுபாண்டியின் உடல் மதுரை வருகை – அமைச்சர்கள், அதிகாரிகள் அஞ்சலி...

 
Published : Apr 25, 2017, 07:27 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
வீரர் அழகுபாண்டியின் உடல் மதுரை வருகை – அமைச்சர்கள், அதிகாரிகள் அஞ்சலி...

சுருக்கம்

constable alagupandi body came to madurai and ministers staffs

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீர அழகுபாண்டி உடல் மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அவரின் உடலுக்கு அமைச்சர்கள் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா என்ற பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் முகாமிட்டு தங்கிருந்தனர். அப்போது அங்கு வந்த 300 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் முகாமை சுற்றி வளைத்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் 74வது படைப்பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பலர் உயிருக்கு போராடி வந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.

சுக்மாவில் மாவோயிடுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 25 வீரர்களில் 4 பேர் தமிழர்கள் ஆவர்.

தமிழக வீரர்கள் செந்தில் குமார், அழகுபாண்டி, திருமுருகன் ஆகியோர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த வீரர்களின் உடல் அவரவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டது.

இந்நிலையில், வீரர் அழகுபாண்டியின் உடல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அவரின் உடலுக்கு அமைச்சர்கள் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், உதயகுமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், எஸ்.பி.விஜயேந்திர பிதாரி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

 

PREV
click me!

Recommended Stories

பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பழனி முருகன் கோவில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டிற்கு தனி கேரக்டர் உள்ளது..! பீகார் மாதிரி இல்லை.. அமித்ஷாவுக்கு உதயநிதி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்