டெல்லி வந்தார் இலங்கை பிரதமர் – மீனவர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை? 

 
Published : Apr 25, 2017, 06:36 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
 டெல்லி வந்தார் இலங்கை பிரதமர் – மீனவர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை? 

சுருக்கம்

srilankan prime minister ranil vikkiramasinge in delhi

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அரசு முறை பயணமாக டெல்லி வந்தார். மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இந்த ஆண்டின் வேசக் தினத்தையொட்டி புத்தமதம் தொடர்பான மாபெரும் சர்வதேச மாநாடு வரும் மே மாதம் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெற உள்ளது. 
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கை செல்லவுள்ளார்.
இதனிடையே ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 5 நாள் அரசு முறைப்பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வருவார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 
அதன்படி இன்று இந்தியாவின் தலைநகரான டெல்லி வந்தார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே. 
நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
அப்போது மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

PREV
click me!

Recommended Stories

அடங்காத 26 வயது அண்ணி சாந்தி.. தீராத வெறியில் இருந்த கொழுந்தன்.. இறுதியில் நடந்த அலறல் சத்தம்.!
பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பழனி முருகன் கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!