
சங்கிலி புங்கிலி கடைய தொற!: தி.மு.க. தலைமையில் எதிர்கட்சிகள் நடத்தியிருக்கும் பந்த் செம ஹிட்தான். மண்டை கருக வெயிலடித்தாலும் கூட ஏதோ மாலத்தீவு கடற்கரையில் ரெயின் வாக் போவது போல் ரங்கநாதன் தெருவில் கும்பலாய் குவிவதுதான் நம்மாளுங்களின் வழக்கம். ஆனால் இன்றைக்கு அந்த வீதிகளெல்லாம் செம வெறிச்!
சென்னையில் மட்டுமில்லை தமிழகம் முழுக்கவே எல்லா மாவட்டங்களிலும் இதே நிலைதான்.
ஆனால் அதேநேரத்தில் இன்னொரு காமெடியையும் சொல்லியாக வேண்டும். காலையிலிருந்து பிற்பகல் வரை வியாபார ஆசையை விவசாயிகளுக்காக அடக்கி வைத்து, பொதுநல நோக்கில் அம்பி அவதாரம் எடுத்திருந்த வியாபாரிகள் மூன்றரை மணிக்கு மேல் அந்நியனாக மாறிவிட்டார்கள்.
மூணு ஐம்பதுக்கெல்லாம் அவரவர் கடைவாசலில் ஆஜரானவர்கள், மணிக்கூண்டில் சரியாக நாலு தபா ‘டொய்ங், டொய்ங், டொய்ங், டொய்ங்’ என்று மணியடித்ததும். பைக்குள் கையைவிட்டு துரவலை துலாவி எடுத்து ‘ஜங்கிலி புங்கிலி கதவை தொற! நாலு மணியாயிட்டு கடையை தொற’ என்று ஷட்டரை பறக்கவிட்ட பரபரப்பை பார்க்க வேண்டுமே!
ஆனாலும் கூட பந்த் டாஸ்க்கு டக்கராய் டார்கெட் ஆனதில் செயல்தலைவர் செம ஹேப்பிதான்!