ஓடிக் கொண்டிருந்த பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு; தனியார் பேருந்துக்கே இந்த நிலைமை…

Asianet News Tamil  
Published : Sep 28, 2017, 09:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
ஓடிக் கொண்டிருந்த பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு; தனியார் பேருந்துக்கே இந்த நிலைமை…

சுருக்கம்

The rush of the bus running was running out of the wheel

கடலூர்

கடலூரில் ஓடிக்கொண்டிருந்த தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப்பில் இருந்து நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று சிதம்பரம் நோக்கிப் புறப்பட்டது. இந்த பேருந்தை உடையூரைச் சேர்ந்த முருகன் ஓட்ட பேருந்தில் 40–க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இந்தப் பேருந்து சிதம்பரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு வந்துக் கொண்டிருந்தபோது, பேருந்தில் முன்புற இடதுப் பக்க சக்கரம் திடீரென்று கழன்று ஓடியது. பேருந்தின் தகரம் தரைத் தட்டியதை உணர்ந்த ஓட்டுநரை பேருந்தை நடுசாலையிலேயே நிறுத்தினார்.

இதனால் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் காயம் எதுவும் இன்றி நல்ல வேளையாக உயிர் தப்பினர்.

பேருந்து நடுசாலையிலேயே நின்றதால் வாகனங்கள் செல்ல வழியில்லாமல் சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து விபத்துக்குள்ளான பேருந்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். பின்னர், போக்குவரத்தும் ஒழுங்கானது.

ஒடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து சக்கரம் கழன்று ஓடியதை பார்த்தவர்கள் இப்படியெல்லாம் கூடவா பேருந்தை வெச்சிட்டு இருப்பாங்க என்று புலம்பிக் கொண்டே சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்