நெற்றில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்...

 
Published : Dec 05, 2017, 08:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
நெற்றில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்...

சுருக்கம்

The rural assistants demonstrated in thanjai

தஞ்சாவூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் தஞ்சாவூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் முரளி தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, மாவட்டச் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

"வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்,

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நெற்றில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் கோதண்டபாணி, சாலை பணியாளர் சங்க மாநிலத் துணை தலைவர் கோதண்டபாணி, மருந்தாளுனர் சங்க மாவட்டச் செயலாளர் பிரபாகரன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!