
சேலம்
மருத்துவ பட்ட மேற்படிப்பில் மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டதற்கு நீட் தேர்வு முறையே காரணம் என்று சேலம் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் கருப்பு அடையாளவில்லை அணிந்து சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தின் அருகே உட்கார்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வர் தலைமை வகித்தார். செயலாளர் வினோத்குமார், பொருளாளர் சுதர்சன் போன்றோர் முன்னிலை வகித்தனர்.
இதில், “மருத்துவ பட்ட மேற்படிப்பில் மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டதற்கு நீட் தேர்வு முறையே காரணம்.
எனவே, முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.