மழை முடிந்துவிட்டது என்று நினைக்காதீங்க !!! சற்று இடைவெளிவிட்டு திரும்பவும் தொடரும் !!!  வெதர்மேன் ரிப்போர்ட் …

First Published Nov 3, 2017, 8:28 AM IST
Highlights
the rain will continue....tamilnadu wetherman report


சென்னையைப் பொருத்தவரை மழை குறைந்துவிடவில்லை  என்றும்  வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டு இருப்பதால், அடுத்துவரும் நாட்களில் சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , சென்னையை மிரட்டிய மிகப்பெரிய பேய் மழை முடிவுக்கு வந்துள்ளது.. மிகப்பெரிய மேக்கூட்டம் சென்னை கடற்கரையை நோக்கி நேற்று இரவு வந்தது ரோடாரில் தெரிந்தது. இப்போது இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் அந்த மேகக்கூட்டங்கள் சிதறியும் வேறு திசைநோக்கியும் சென்றுவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.. 

அதே நேரத்தில் அடுத்துவரக்கூடிய மழையைப் பார்த்தும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவை  நிலப்பகுதியை நோக்கி வந்தாலும், அதனால், பெரிய அளவுக்கு மழை இருக்காது, லேசான மழையை மட்டுமே தருவிக்க முடியும் அல்லது சாரல் மழைதான் பெய்யும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள  நிலையில், சென்னைக்கு அருகே மிகப்பெரிய மேகக்கூட்டங்கள் மூலம் கனமழைக்கு வாய்ப்பு இல்லை எஙன்பதால்  அச்சப்படத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.. 

என்னடா இரவு இப்படி பேய் மழைபெய்தது, இன்று நல்ல வெயில் அடிக்கிறதே என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் வெயிலைப்  பார்த்தும் ஆச்சர்யப்படாதீர்கள் என வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையைப் பொருத்தவரை மழை குறைந்துவிடவில்லை  என்றும்  வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டு இருப்பதால், அடுத்துவரும் நாட்களில் சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று இரவு கொட்டித்தீர்த்த மிகப்பெரிய மழைக்கு நன்றி என் தெரிவித்துள்ள வெதர்மேன், ,இந்த மழை இரவுநேரத்தில் பெய்தது அனைவருக்கும் பாதுகாப்பு என்றம்  பெரும்பாலான இடங்களில் மழை நீர் வடிந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

tags
click me!