கோவை சிலிண்டர் வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் வெடி பொருட்களுக்கு தேவையான வேதிப்பொருட்களை அமேசான், பிளிப்கார்டில் வாங்கியதாக கோவை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை கார் வெடி விபத்து
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை கோட்டை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு திடீரென காரில் இருந்து சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் கார் முழுவதும் பற்றி எரிந்ததில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் முதலில் விபத்து என நினைக்கப்பட்ட நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தில் ஆணி, பால்ராஸ் குண்டுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது போலீசாரை அதிர்ச்சி அடையவைத்தது. இதனையடுத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
75 கிலோ வெடி பொருள் பறிமுதல்
இந்த விசாரணையில் இறந்தது ஜமேசா முபின் என தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெடிபொருட்களுக்கு தேவையான பொட்டாட்சியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து இந்த வெடி விபத்து வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்து UAPA சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். முன்னதாக ஜமேசா முபின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட 75 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் ஜேமிசா முபின் பெரியம்மா மகன் அப்சர்கான் என்பவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு போலீசார் சோதனை செய்தனர். பின்னர் அப்சர் கானை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆன்லைனில் வாங்கிய வெடி பொருள்
இந்தநிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெடி பொருட்களுக்கு தேவையான சல்பர் போன்றவற்றை ஆன்லைன் வர்த்தகமான அமேசான், பிளிப்கார்டில் வாங்கி கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தான் வெடி பொருட்களுக்கு தேவையான வேதி பொருட்களை வாங்கி கொடுத்த அப்ஸர் கானை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
கோவை கார் வெடி விபத்து..! இறந்த முபினின் உறவினர் அப்ஸர் கானை அதிரடியாக கைது செய்த போலீஸ்