
விழுப்புரத்தில் போலி டிராவல்ஸ் அலுவலகம் நடத்தி மலேசியா, துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 15 லட்சம் வரை மோசடி செய்த புகாரில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர் போலி விமான டிக்கெட் கொடுத்ததாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த இப்ராஹிம் என்பவர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து இப்ராஹிம் கொடுத்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு காவல்த்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் விழுப்புரத்தில் அருண் என்பவர் போலி டிராவல்ஸ் அலுவலகம் நடத்தி 50க்கும் மேற்பட்டவர்களிடம் மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 15 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், சென்னை அம்பத்தூரில் தலைமறைவாக இருந்த அருணை தனிப்படை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த பாஸ்போர்ட், போலி விசா தயாரிக்க பயன்ப்படுத்தப்பட்ட கணினி, கார் மற்றும் ரூ.2,60,00 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.