
பொது விநியோகத் திட்டமான ரேஷன் கடைகளுக்கு விரைவிலேயே மூடு விழா நடத்தி விடுவார்களோ என்ற அச்சம் இப்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
அதற்குக் காரணமாக அமைந்தது அரசின் திடீர் அறிவிப்புதான். பொதுவிநியோக திட்டத்தின் கீழ் இனி உளுத்தம் பருப்பு வழங்கப்படாது என்றும், துவரம் பருப்பு மட்டும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேசன் கடைகளில் இனி உளுத்தம் பருப்பு வழங்கப்படாது என்று தமிழக அரசின் இன்றைய அறிவிப்பு பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அரசு, பொது விநியோகத் திட்டத்துக்கான உளுத்தம் பருப்பு கொள்முதலை நிறுத்தி விட்டதாகவும், இனி ரேசன் கடைகளில் துவரம் பருப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளதுதான், ரேஷன் கடைகளை இனி சீக்கிரமாவே மூடிடுவாங்களோ என்று பொதுமக்களை அச்சப்பட வைத்துள்ளது. அண்மைக் காலத்தில் ரேஷன் சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.25 ஆக உயர்த்தப் பட்டது.
ஏற்கெனவே மத்திய அரசின் பொது விநியோகத் திட்ட வரைமுறைகளுக்குள் தமிழகத்துக்கான பொது விநியோகப் பொருள்களில் கோதுமை உள்ளிட்டவை அளவு குறைக்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.