
ஈரோடு அருகே சுவற்றில் துளை போட்டு உதிரிபாக விற்பனை கடைக்குள் சென்று பொருட்களை களவாடிய முகமூடி திருடனை சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே பாலாஜி என்பவர் நம்பி அன் கோ என்ற உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
இவர் தினமும் காலை 10 மணிக்கு கடைய திறந்து இரவு 8 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விடுவார். அதன்படி நேற்று இரவுவும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து இன்று காலை கடையை வந்து பார்க்குபோது கடையின் சுவற்றில் துளையிட்டு இருப்பது தெரியவந்தது.
கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த உதிரிபாகங்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் கடையில் இருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சுவற்றை துளையிட்டு கடைக்குள் நுழைந்த திருடன், முகத்தில் கைக்குட்டை கட்டியபடி க கல்லாபெட்டி மற்றும் கடையில் இருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவன காட்சிகளை வைத்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.