
சென்னை பெருங்குடியில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை பெருங்குடியில் கல்லுக்குட்டையைச் சேர்ந்தவர்கள் குரு-பிரேமலதா தம்பதியினர். இவரின் குழந்தை விஷ்வா நேற்று இரவு வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து பிரேமலதா குழந்தை விஷ்வாவை தேடி வெளியே வந்தார். அப்போது திடீரென குழந்தை காணாமல் போனான். இதையடுத்து பிரேமலதா வீட்டில் இருந்த கணவரிடம் கேட்டார்.
இதைதொடர்ந்து பெற்றோர், உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தில் தேடியும் குழந்தை குறித்த தகவல் கிடைக்கவில்லை.
பின்னர், குரு மற்றும் பிரேமலதா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் வீடு அருகே இருந்த சிசிடிவி கேமராவை சோதனை மேற்கொண்டனர்.
அதில் வெள்ளைச்சட்டை அணிந்த மர்மநபர் ஒருவர் குழந்தையை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையை கடத்திச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.