விஜயகாந்த் மறைவு..! அடக்கம் செய்ய தேர்வு செய்யப்பட்டது புதிய இடம்- தேமுதிக அலுவலகத்தில் தொடங்கியது பணி

By Ajmal KhanFirst Published Dec 29, 2023, 10:37 AM IST
Highlights

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று உடல்நிலை பாதிப்பால் உயிர் இழந்த நிலையில், இன்று மாலை தேமுதிக அலுவலக வளாகத்தில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. இ்ந்தநிலையில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்ய நேற்று ஒரு இடம் மார்க் செய்யப்பட்டிருந்தது. தற்போது அதற்கு அருகாமையில் வேறு இடம் தேர்வு செய்யப்பட்டு மார்க் செய்யப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது.

காலமானார் விஜயகாந்த்- பொதுமக்கள் அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கடந்த சில வருடங்களாகவை உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் பகுதியில் அதிகளவு சளி இருந்ததால் நிம்மோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததையடுத்து நேற்று காலை 6 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Latest Videos

தீவு திடலில் அஞ்சலி

இதனையடுத்து அவரது உடலானது தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகளவு கூட்டம் வருவதால் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் முக்கிய நபர்கள் வந்து செல்லவும் சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீவு திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 1 மணியளவில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தீவு திடலில் இருந்து தொடங்கப்படவுள்ளது. மாலை 4.45 மணி அளவில் தேமுதிக அலுவலகத்தில் இறுதி சடங்கு அரசு மரியாதையோடு நடைபெறுகிறது.

தேமுதிக அலுவலகத்தில் இறுதி சடங்கு

இந்தநிலையில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்ய நேற்று ஒரு இடம் மார்க் செய்யப்பட்டிருந்தது. அந்த இடம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலத்தில் விஜயகாந்திற்கு நினைவு மண்டபம் அமைக்கும் வகையில் தற்போது அதற்கு அருகாமையில் வேறு இடம் தேர்வு செய்யப்பட்டு மார்க் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இடத்தில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியுள்ளது. இறுதி சடங்கில் 500 பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

விஜயகாந்த் உடல் அடக்கம்.. காத்திருக்கும் ஜேசிபி.. தேமுதிக அலுவலகத்தில் இன்னும் தொடங்காத பணி- காரணம் என்ன.?

click me!