
ஜெ போட்டோவை மோடி போட்டோவாக மாற்றி,சமூக வலைதளங்களில் பரவ விட்டவர் போலிசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
குமரி மாவட்டத்தில் ‘ஒகி’ புயல் பாதிப்புகளை பார்வையிட சமீபத்தில் பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தார்.
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வந்திருந்து, பிரதமரை வரவேற்றார், அப்போது எடுக்கப்பட்ட ஒரு போட்டோவில், முதலவர் பழனிசாமி சட்டையில் ஜெயலலிதா அவர்களின் படத்தை வைத்திருந்தார்.வெளியிலிருந்து பார்க்கும் போதே தெரியும்,அது 'ஜெ' வின் போட்டோ தான் என்று...
ஆனால், ஜெ போட்டோவை மாற்றி மோடி போட்டோ இருப்பது போல போட்டோஷாப் செய்து வெளியிடப்பட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, சர்ச்சை பேச்சுக்கு வழி வகுத்தது
இதுதொடர்பாக அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணைச் செயலாளரான கனகராஜ் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி என்பவரை கைது செய்தனர்.
அலெக்ஸ்பாண்டி, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் என தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இது போன்று சர்ச்சைக்குரிய மீம்ஸ் செய்து வெளியிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.