கடைசி நேரத்தில் பெரிய பாண்டியன் பேசிய வார்த்தை என்ன தெரியுமா?

 
Published : Dec 28, 2017, 06:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
கடைசி நேரத்தில் பெரிய பாண்டியன் பேசிய வார்த்தை என்ன தெரியுமா?

சுருக்கம்

The periya Pandian spoke the last time

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் துப்பாக்கி சூட்டில் பலியானார். 

பெரியபாண்டியை சுட்டது யார் என்பது குறித்து மர்மம் நீடித்துக்கொண்டே வந்தது. 

இது தொடர்பாக ராஜஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில் பெரியபாண்டியன் உடலில் இருந்த குண்டு, முனிசேகர் துப்பாக்கியில் இருந்ததுதான் என்றும், முனிசேகர் தவறுதலாக சுட்டதால்தான் பெரியபாண்டி உயிரிழந்ததாகவும் ராஜஸ்தான் போலீஸ் கூறியிருந்தது. 

இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் மற்றும் உறவினர்கள் சிலரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் போலீஸ் கூறியதை சென்னை போலீஸ் உறுதி செய்துள்ளது. அதாவது, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை சுட்டது முனிசேகர்தான் எனவும் கொள்ளையன் நாதுராமை பிடிக்க முனிசேகர் சுட்டபோது குறி தவறி பெரிய பாண்டியன் உயிரிழந்துள்ளார் எனவும் சென்னை போலீஸ் உறுதிபட தெரிவித்துள்ளது. 

இதனை அடுத்து, முனிசேகர், பெரியபாண்டியின் சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு சென்றார். அங்கு பானுரேகாவின் காலில் விழுந்து முனிசேகர் மன்னிப்பு கேட்டு அழுதுள்ளார். 

காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்டதாகவும் அவரை தப்ப வைக்க கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தும்போது, தவறாக பெரிய பாண்டியன் மீது பாய்ந்துவிட்டது எனவும் பானுரேகாவிடம் முனிசேகர் விளக்கியுள்ளார். 

மேலும் பெரிய பாண்டியன் பேசிய கடைசி வார்த்தையாக ஒன்றை முனிசேகர் குறிப்பிட்டுள்ளார். அதாவது கொள்ளையர்களை நோக்கி சுட்ட குண்டு தவறுதலாக பாய்ந்துவிட்டது முனிசேகர் என கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!