
சென்னையில் குற்றச்சம்பவங்களை குறைக்கும் வகையில் புதிய செல்போன் செயலியை காவல்துறை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
சென்னையில் தொடர் கொள்ளை சம்பவங்களும் திருட்டு சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
செல்போன் பறிப்பு, நகைப்பறிப்பு என குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை தடுக்க காவல்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும் திருட்டும் கொள்ளையும் கட்டுப்பாட்டில் உள்ளதா என்றால் இல்லை என்ற பதில் தான் அனைவரது எண்ணத்திலும் எழும்.
இதனால் பல வழக்குகளில் சிக்கிய குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில், புதிய செல்போன் செயலியை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல் கட்டமாக தியாகராயா நகரில் இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 500 காவலர்கள் புதிய செயலியை பதிவிறக்கம் செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்து வருகின்றனர்.