பிரபல நகைக்கடையில் கொள்ளை - சுவரையே துளை போட்டு மர்ம நபர்கள் கைவரிசை...!

 
Published : Nov 16, 2017, 06:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
பிரபல நகைக்கடையில் கொள்ளை - சுவரையே துளை போட்டு மர்ம நபர்கள் கைவரிசை...!

சுருக்கம்

Lakshmi Jewelery near Kolathur in Chennai stole the wall of the jewelry store and stolen 2kg of jewels and strangled the incident.

சென்னை கொளத்தூர் அருகே உள்ள லட்சுமி ஜுவல்லரி நகை கடையின் சுவரை துளை போட்டு 2 கிலோ நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கொளத்தூர் அருகே ராஜமங்கலம் கடப்பா சாலையில் லட்சுமி ஜூவல்லரி நகை கடை இயங்கி வருகிறது. 

இந்த கடையின் உரிமையாளர் தினமும் இரவு 9 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். 

மீண்டும் காலை 9 மணிக்கு உரிமையாளர் கடையை திறந்துள்ளார். அப்போது கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு மர்மநபர்கள் சுமார் ரூ. 45 லட்சம் மதிப்பிலான தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து அதிர்ச்சியடைந்த உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு