தமிழகத்தை மிரட்டும் புயல்..! 6 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

By Ajmal KhanFirst Published Dec 6, 2022, 8:41 AM IST
Highlights

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலாமக உருமாறி புயலாக வலுப்பெற உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் புயல் எச்சரிக்கை அதிகம் உள்ள சென்னை, நாகை.கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் விரைகின்றனர்.
 

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து புயலாக மாறி நாளை மறுதினம் காலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டி, ஆந்திர கடலோரப் பகுதியின் அருகில் வரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காற்றின் வேகம் 55 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநரை திரும்ப பெறக்கோரி முற்றுகை போராட்டம்..! ஒன்றன் பின் ஒன்றாக களத்தில் குதிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்

இந்தநிலையில் நாளை கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மறுநாள்  (8-ம் தேதி) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது.? கட்சியை வழிநடத்த யாருக்கும் தகுதி இல்லை.! ஜெ. நினைவு நாளில் தீபா ஆவேசம்

இதனையடுத்து புயல் பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் வகையில், தேசிய பேரிடர் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு குழுவானது இன்று விரைகிறது. தாழ்வான பகுதியில் உள்ள மக்களை மீட்கவும், புயலின் காற்றின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் செல்லவுள்ளனர்.

இதையும் படியுங்கள்

தி.மலை தீபத் திருவிழா..! அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்..! அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்
 

click me!