3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மிக கனமழை..! களத்தில் இறங்க தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு

By Ajmal Khan  |  First Published Dec 17, 2023, 1:02 PM IST

தென் மாவட்டங்களில் மழையானது கொட்டித்தீர்த்து வரும் நிலையில், மீட்பு பணிகளை மேற்கொள்ள நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளனர். 


வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தென்இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று (17.12.2023) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Latest Videos

undefined

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு  30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்தை கதிகலங்க வைக்கும் மழை pic.twitter.com/xvPUE6MMXX

— Tenkasi Weatherman (@TenkasiWeather)

 

 

இந்தநிலையில் நேற்று முதல் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து 10,000 கன அடியாக இருப்பதால், முன்னெச்சரிக்கையாக தாமிரபரணியில் 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பிற பகுதிகளிலும் பெய்யும் மழையால் தாமிரபரணியில்  5000 கன அடி அளவிற்கு நீர் செல்லும் என்பதால், ஆற்றின் கரையோர பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால்  திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்றுள்ளனர். 100 பேர் அடங்கிய 4 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 

இதையும் படியுங்கள்

தென் மாவட்டங்களில் சம்பவம் தொடங்கியது.. 30 முதல் 50 செ.மீ மழை பெய்யுமாம்.. தமிழ்நாடு வெதர்மேன் பகீர்.!
 

click me!