MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தென் மாவட்டங்களில் சம்பவம் தொடங்கியது.. 30 முதல் 50 செ.மீ மழை பெய்யுமாம்.. தமிழ்நாடு வெதர்மேன் பகீர்.!

தென் மாவட்டங்களில் சம்பவம் தொடங்கியது.. 30 முதல் 50 செ.மீ மழை பெய்யுமாம்.. தமிழ்நாடு வெதர்மேன் பகீர்.!

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடைவிடாது தொடர்ச்சியாக மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 17 2023, 11:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamilnadu Rains

Tamilnadu Rains

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட வட கடலோர மாவட்டங்கள் அதீதகனமழை வெளுத்து வாங்கியது. இதனால், தலைநகர் சென்னையை வெள்ளம் தலைகீழாக புரட்டி போட்டது. 

24
meteorological centre

meteorological centre

இந்நிலையில், தென் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

34
tamil nadu weatherman pradeep john

tamil nadu weatherman pradeep john

இதன் காரணமாக கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், மாஞ்சோலை மலைப்பகுதியில் 30 முதல் 50 செ.மீ மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். 

44
tamil nadu weatherman

tamil nadu weatherman

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- தென் மாவட்டங்களில் சம்பவம் தொடங்கியது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடைவிடாது தொடர்ச்சியாக மழை பெய்யும். மாஞ்சோலை மலை மற்றும் கோதையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளை கவனிக்க வேண்டும். மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணை இரண்டுமே உபரியாக இருக்கும். மாஞ்சோலை மலைப்பகுதியில் 30 முதல் 50 செ.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
தமிழ்நாடு மழை
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
வடகிழக்கு பருவமழை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved