நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள்; விவசாயியை அரிவாளால் வெட்டிவிட்டு நகை, பணம் கொள்ளை...

 
Published : Dec 28, 2017, 09:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள்; விவசாயியை அரிவாளால் வெட்டிவிட்டு நகை, பணம் கொள்ளை...

சுருக்கம்

The mysterious people entered house at midnight Cut the farmer and jewelry money theft

திருவள்ளூர்

திருவள்ளூரில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் விவசாயியை அரிவாளால் வெட்டிவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தை அடுத்த ஆத்துப்பாக்கத்தில் வசிக்கும் விவசாயி வாசுதேவன் (50). செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடிரென கதவைத் தட்டும் சத்தம் கேட்டதால் வாசுதேவன்  எழுந்துச் சென்று கதவைத் திறந்துள்ளார்.

அப்போது, முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென கதவைத் தள்ளி உள்ளே புகுந்து வாசுதேவனை அரிவாளால் தலையில் வெட்டியுள்ளனர்.

இதனை பார்த்து அலறிய அவரது மனைவி நிர்மலாவிடம், மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த ஆறு சவரன் தாலிச் சரடு மற்றும் வீட்டிலிருந்த ரொக்கப் பணம் ரூ.50 ஆயிரத்தை கொள்ளை அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

பின்னர், இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் காவலாளர்கள், வாசுதேவனை மீட்டு பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து  மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!