கடந்த சில மாதங்களாக, சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் பிணங்களை மர்ம மனிதர் ஒருவர் வெட்டி தின்று வந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில மாதங்களாக, சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் பிணங்களை மர்ம மனிதர் ஒருவர் வெட்டி தின்று வந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடும் மர்மநபரை கண்டு பிடிக்க... சுடுகாட்டில் ரகசியமாக ஆட்களை நியமித்தனர். அதன்படி கடந்த ஓரிரு தினத்திற்கு முன், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி உயிரிழந்தார்.
எனவே அவரை முறைப்படி அந்த கிராம மக்கள் சுடுகாட்டில் தகனம் செய்துவிட்டு. ஊர் திரும்பினார். அப்போது யாரும் இல்லாத சமயம் பார்த்து பிணங்களை வெட்டி தின்னும், மர்ம மனிதன் கையில் அருவாளோடு வந்து, பாட்டியின் உடலை தோண்டி பாதியாக வெட்டி தின்னத் தொடங்கியுள்ளார்.
சுடுகாட்டில் மறைந்திருந்த ரகசிய ஆட்கள் இவர் செய்வதை பார்த்து கொண்டிருந்த நிலையில் அவரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த மர்ம மனிதன் குறித்து போலீசார் விசாரித்த போது, அவர் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் (45 ) என்பதும், இவர் போதை பழக்கத்திற்கு அடிமையானதால், இவருடைய மனைவி இவரை விட்டு தனியாக பிரிந்து வசித்து வருவதும் தெரியவந்தது.
மேலும் இவர் தொடர்ந்து பிணங்களைத் தின்னும் பழக்கத்தை கொண்டுள்ளதால் இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கருதி போலீசார் இவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.